அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் (Video)
டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எமது மாவட்டத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என்றார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய எமது காலை நேர செய்திகளின் தொகுப்பு,

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
