யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு
02 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் போக்காட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய், சங்கானை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் பொன்னாலை பருத்தித்துறையின் ஏ.பி.019 வீதியின் 50km தொடக்கம் 55km வரையான பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam