கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்..
கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
மாவீரர்களின் நினைவுநாள் இன்று தமிழர்கள் மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், நாட்டின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது.
இருப்பினும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் ஏற்பாட்டு குழுக்களால் மாவீரர்கள் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வன்னி - விளாங்குளம்
வன்னி - விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.


முழங்காவில்
அதேவேளை, முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.


GBK4N
















சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam