யாழ். நகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Crime
By Rakesh Feb 04, 2025 09:18 AM GMT
Report

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (3) நடைபெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன.

குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு

குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு

அறிவுறுத்தல்

அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

யாழ். நகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை | Jaffna Awareness Campaign For City Traders

யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், வர்த்தக நிலையத்தின் முன்பாகவுள்ள வடிகால்களை துப்புரவாக வைத்திருப்பது அந்தந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பு எனவும் மாநகர சபை ஆணையாளர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நிலையங்களில் குப்பைகளைச் சேர்த்து வைக்குமாறும் தினமும் இரு தடவைகள் யாழ். மாநகர சபையால் அவை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோன்று வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர்.

அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கடைகளை அகற்ற நடவடிக்கை

எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்கான நேரத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், நகரின் சில வீதிகளை ஒருவழியாக்குவதற்கும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

யாழ். நகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை | Jaffna Awareness Campaign For City Traders

மேலும், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பார்வையிட்டார்.

பேருந்து நிலையத்தைச் சுற்றி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க, யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGallery
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US