வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை!
வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண வலய உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக இடம் பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வட மாகாணத்தில் தெங்கு பயிர் செய்கை சபைக்கு ஒரே ஒரு தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் மட்டும் பணியாற்றுகின்றார்.
தேங்காய் விலை
மேலும் 3 தென்னை அபிவிருத்தி உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.எமக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட போதும் இதுவரை ஆளனி நியமனங்கள் எதுவும் நிரப்பப்படாமலுள்ளது.

இலங்கையில் தற்போது தேங்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம் தேங்காய் உற்பத்தி மிக குறைவாக உள்ளமையே. குறைவான தேங்காய் உற்பத்தியிலிருந்த வடக்கு மாகாணம் தற்போது தேங்காய் உற்பத்தியில் அதிகரித்து காணப்படுகின்றது.
இதற்கு வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்பட்டமையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.