கல்முனை ஆதார வைத்தியசாலைக்குள் நுழையுமா CID! அமைச்சரின் அதிரடியால் ஆட்டம் ஆரம்பம்
கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்திலே தலையிட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்து வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் இடுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஆடை விவகாரம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்காமல் இரு தரப்பினருக்கும் சமமான நீதியினை வழங்குமாறும், இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri