இடமாற்றம் செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம்
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் இயங்கி வந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீதியிலுள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றில் இதுவரை காலமும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இயங்கி வந்ததுடன், அதன் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்திருந்தன.
இந்நிலையில் மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகள்
எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மேலதிக நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் சிறுவர் நீதிமன்றக் கட்டடத்தில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இனிவரும் காலங்களில் குறித்த கட்டடத்தில் சிறுவர் நீதிமன்றம் மட்டுமே இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி நிதி கிடைத்தால் கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடரும்: முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan