தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன், மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.
சிறீதரன் உரை..
இதன்போது கருத்துரைத்த சிறீதரன், "இலங்கை தமிழரசுக்கட்சி, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையும், மட்டக்களப்பு இரண்டு சபைகளுமாக மொத்தம் ஆறு பிரதேச சபைகளில் சுதந்திரமாக எந்தவித இடையூறுகளும் இன்றி ஆட்சி அமைக்கவுள்ளோம்.
அதேநேரம், கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் போதாது உள்ள நிலையில் அந்த ஒரு ஆசனம் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசிடம் உள்ளது.

அந்த ஆசனத்தை கொள்கை ரீதியாக ஆதரவு வழங்க இணங்கி இருக்கிறார். நெடுந்தீவிலும்இவ்வாறு இணங்கியுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேச சபையில் தமிழ்க்காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam