நெல் பயிரிடும் விவசாயிகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்
விதை நெல் உற்பத்தி பண்ணைகளின் காப்பீடுக்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி இந்த தகவலை வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போதைய நிலைமைகளை நிர்வகிப்பதன் மூலம் விதை நெல் உற்பத்தி பண்ணைகளுக்கு வெற்றிகரமாக காப்பீடு செய்வதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதம்
வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபை இந்த காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதற்கமைய, ஒரு ஏக்கர் விதை நெல்லுக்கு ரூபா 13,600 காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட வேண்டும், பின்னர் பயிர் சேதம் ஏற்பட்டால் விவசாயிக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூபா 180,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளம், வறட்சி, கட்டுப்படுத்த முடியாத நோய்கள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை நிலைமைகளாலும் ஏற்படும் பயிர் சேதம், காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதம் ஆகியவை இந்த காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.