உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 - நாடளாவிய ரீதியில் வேட்புமனுத் தாக்கல்
யாழ். மாவட்டத்தில் உள்ளள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்றும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை வல்வெட்டித்துறை நகரசபை தவிர்ந்த யாழில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இந்த வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.
இன்று மதியம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்மை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11 மணியளவில் வேட்பு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்றையதினம் யாழில் உள்ள 05 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன் இன்று 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
வவுனியா
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று (20.03) தாக்கல் செய்தது.
நேற்றைய தினம் (19.03) வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.
முல்லைத்தீவு
மாந்தைகிழக்கு உள்ளூராட்சி சபையின் வேட்புமனுவை கையளித்தது தமிழரசு பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு உள்ளூராட்சி சபைக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (20.03.2025) இலங்கைத் தமிழரசுக்கட்சி கையளித்தது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரன் அவர்களால் குறித்த வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
மேலும் நேற்றையதினம் (19.03.2025) கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (20)திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இதில் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என வேட்புமனுதாக்கல் செய்தனர். இன்றைய தினம் குறித்த வேட்பு மனுக்களை இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், பொது ஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, சர்வஜன அதிகாரம், தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்திருந்தனர்.
மலையகம்
நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (20.03.2025) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
