யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை அடியோடு புறக்கணித்த தமிழரசுக் கட்சி!

Anura Kumara Dissanayaka M. A. Sumanthiran ITAK NPP Government
By Rakesh Jan 15, 2026 04:53 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று(15.1.2026) கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்தத் தகவலை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அநுர அரசு எந்த கல்விச் சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை

அநுர அரசு எந்த கல்விச் சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார்.

அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை அடியோடு புறக்கணித்த தமிழரசுக் கட்சி! | Itak Avoid President S Events In Jaffna

இதற்குப் பிரதான கரணம் "பிரஜாசக்தி" எனும் பெயரில் அரச இயந்திரங்களுக்குச் சமாந்தரமாக தமது கட்சியைச் சார்ந்தவர்களை கொண்டு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாம் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளோம்.

உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களைத் திசை மாற்றிக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் கிடைக்காத இடங்களில் இத்தகைய செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

சட்ட ரீதியாக உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைகளை வறுமை ஒழிப்பு எனும் பெயரில் நேரடியாக மத்திய அரசு செய்வதைச் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கண்டனம்

சுனாமி ஏற்பட்ட போது, வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முயன்றபோதே இதே ஜே.வி.பியினர்தான் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராகத் தடையுத்தரவைப் பெற்றனர்.

அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம், அரச அமைப்புக்கு சமாந்தரமாக எந்தவொரு அமைப்பையும் செயற்பட அனுமதிக்க முடியாது என்பதே.

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை அடியோடு புறக்கணித்த தமிழரசுக் கட்சி! | Itak Avoid President S Events In Jaffna

சுனாமியால் மிக மோசமாகப் பாதிப்படைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள் கட்டுமானம் செய்ய முடியாமல் செய்தவர்கள் அவர்கள்.

அதே சட்ட அடிப்படையில் அவர்கள் இன்று அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் ஊடாக சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை அதற்குச் சமாந்தரமாக, தமது கட்சிக்காரர்களை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி அதன் ஊடாகச் செய்ய முயல்கின்றனர்.

அரச உதவிகள், நிவாரணங்கள், நிதிகளில் தங்களின் கட்சியை அவர்கள் வளர்க்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர்கள் பாவித்த அதே சட்டக் கோட்பாட்டை உபயோகித்து அதனை நிறுத்த முயற்சி எடுப்போம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முதல் கட்டமாக ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவ ட்ரக்குடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணம்

இராணுவ ட்ரக்குடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணம்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US