நாட்டை பழைய நிலைக்கு மீட்டெடுக்க மூன்றுவருடங்கள் செல்லும்: பிரதமர்
இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் குறைந்தது மூன்று வருடங்கள் செல்லும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடம் சூம் இணையத்தள கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர்,

சவாலை எவ்வகையிலேனும் நிறைவேற்றுவேன்
இளைஞர்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை நான் சவாலாக ஏற்றுக் கொண்டுள்ளேன். குறித்த சவாலை எவ்வகையிலேனும் நிறைவேற்றுவேன்.
இந்த ஆண்டில் எதிர்பார்த்த மாற்றங்களை எம்மால் ஏற்படுத்த முடியாமற் போகும். எனினும் 2024ஆம் ஆண்டளவில் நாடு மீண்டும் நம்பிக்கை தரும் மாற்றங்கள் வழியாகப் பயணிக்கத் தொடங்கும் அடுத்த ஆண்டிலும் நாட்டில் சிறுசிறு முன்னேற்றங்களைக் காணக் கூடியதாக இருக்கும்.
ஆனாலும் 2024ஆம் ஆண்டுதான் ஓரளவு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் அதே போன்று 2025ஆம் ஆண்டளவிலேயே நாடு மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்க முடியும்.
அபிவிருத்திக்கான எமது பயணத்தை நாமும் ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
