தண்டிப்பது தவறு! நாமலுக்குப் பிறந்த ஞானம்-செய்திகளின் தொகுப்பு
போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பிள்ளைகளை விளக்கமறியலில் வைத்து பொலிஸ் அறிக்கையை வழங்கி, அவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவிருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வது தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு செயலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் வெலிமடையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“போராட்டத்தை வழி நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உதவி, ஒத்தாசைகளை வழங்கியவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனினும் போராட்டம் என்ற அலைக்கு ஏமாந்து சென்ற பல பிள்ளைகளை உள்ளனர். தவறாக வழிநடத்தப்பட்ட பல பிள்ளைகள் இருக்கின்றனர். போராட்டத்தை பார்க்க சென்ற பலரும் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரயோசனமில்லை.
போராட்டம் என்ற அலை காரணமாக அதில் கலந்துக்கொண்ட பிள்ளைகளை வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பது பலனளிக்காத விடயம்.”என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri