மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பங்கேற்புடன் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பாகவும், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில் நிலவும் அதிகாரி மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வுகள் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
வாழ்வாதாரப் பிரச்சினை
மேலும் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் மன்னார் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் பிராந்திய மக்களின் சுகாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களை அதிகபட்ச பயனுள்ள முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு தேவையான வாகன வசதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் கடற்படையால் அபகரிக்கப்பட்ட காணிகள்! உடனடியாக விடுவிக்ககோரி போராட்டம்