திலீபன் சிலை அகற்றம் விவகாரம் - நான்கு பேருக்கு யாழ். பொலிஸார் அழைப்பாணை
நல்லூரில் தியாக தீபத்தின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கான நால்வருக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் நல்லூரில் தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலையை வைப்பதற்கான அனுமதியை மாநகர சபை உறுப்பினர் மனுசிகான் கோரியிருந்தார்.
நால்வருக்கு பொலிஸார் அழைப்பாணை
இதனைத் தொடர்ந்து நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலை சரியாக 27ஆம் திகதி காலையில் பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணி சுகாஷ் முன்னிலையாகியிருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சிலை வைத்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்க வருமாறு, தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பை சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan