புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து அடுத்த சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டத்தரணிகளின் மத்தியில் இருந்து பணிமூப்பு அடிப்படையில், சிரேஸ்ட நிலை கொண்ட ஒருவரை மாத்திரமே குறித்த பதவிக்கு நியமிக்க, அரசியலமைப்பு ரீதியான கடப்பாடு எதுவும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
நியமனச் செயன்முறை
முன்னதாக எச்.சரத் என். சில்வா மற்றும் மொஹான் பீரிஸ் போன்றவர்கள், திணைக்களத்தின் சிரேஸ்ட பதவிகளுக்கு வெளியில் இருந்து நியமிக்கப்பட்ட வரலாற்றுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் 2016 ஆம் ஆண்டுக்கான நியமனச் செயன்முறையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்திரத்தன்மை மற்றும் உள்ளகப் படிநிலைக்கு மரியாதை போன்ற காரணங்களைக் காட்டி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள மிக மூத்த அதிகாரி ஒருவரை சட்டமா அதிபராக நியமிக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி தரப்பிடம் வாதிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
