பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்கான ஆதரவை உறுதி செய்வோம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

Jaffna Sri Lanka Israel Israel-Hamas War
By Theepan Oct 21, 2023 03:41 PM GMT
Report

பலஸ்தீன தேசத்தின் மீதும் அங்குள்ள பொதுமக்களின் நிலைகள் மீதும் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடாத்திவரும் தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் பலஸ்தீன தேசத்து மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு தமது தொடர்ச்சியான ஆதரவையும் உறுதிப்படுத்துவதாக புளொட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த விடயமானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் .......! இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் .......! இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

கொடூரமான தாக்குதல்

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, பலஸ்தீன தேசத்தின் ஒரு பகுதியாயினும், பலஸ்தீன அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட காசாப் பிரதேசத்தில் இருந்து கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலைக் காரணம் காட்டி, பலஸ்தீன மக்கள் அனைவரையும் காவு கொள்ளும் கொடூரமான தாக்குதல்களையும், வாழ்வாதாரத் தடைகளையும் செயற்படுத்த முனையும் இஸ்ரேலின் நோக்கம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்கான ஆதரவை உறுதி செய்வோம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | Isreal Hamas War Sri Lanka

ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை உணவு மற்றும் மருந்து விநியோகங்களை தடை செய்து பலஸ்தீன மக்களை அடிபணிய வைக்க எத்தனித்த இஸ்ரேல் பல்வேறு புற அழுத்தங்களினால் தற்போது நட்பு நாடான எகிப்து ஊடாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடக்க அனுமதித்துள்ளது.

ஒரு இஸ்ரேலியர் காயப்படுத்தப்பட்டால் பதிலுக்கு பல பலஸ்தீனியர்களின் உயிர்களைக் காவு கொள்ளும் கொள்கையை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்களுக்கு அச்சத்தையும் இஸ்ரேலிய மக்களுக்கு அதீத நம்பிக்கையையும் கொடுத்து வைத்திருந்த இஸ்ரேலின் புலனாய்வில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பலிக்கடாவாக்கும் நோக்கத்தை அனுமதிக்க முடியாது.

மேற்குக் கரையில் ஆட்சியை வைத்திருக்கும் முகமட் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபை 1960 களில் உலக நாடுகளால் இணக்கம் காணப்பட்டிருந்த ‘இரு நாடு’ எனும் தீர்வை ஏற்றுக் கொண்டிருந்தாலும், காஸாவின் ஆட்சியை வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இஸ்ரேல் நடைமுறையில் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு உறுப்பினர்களை முற்றாக அழிப்பதென்பது காஸாவில் உள்ள அனைத்து பலஸ்தீன மக்களையும் படுகொலை செய்வதன் மூலமே சாத்தியமாகும். அத்துடன் ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழிக்கும் எண்ணத்தில் நிற்கும் இஸ்ரேல், ஏழாம் திகதித் தாக்குதலில் சம்பந்தப்பட்டிராத மேற்குக்கரையின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் படைப்பலத்தை பிரயோகித்து தாக்குதல்களை நடாத்தி நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்று வருகிறது.

பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்கான ஆதரவை உறுதி செய்வோம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | Isreal Hamas War Sri Lanka

பலஸ்தீன தேசமானது, (2012.11.29) அன்று ஐ.நா. சபையின் 67/19 இலக்க தீர்மானத்தின் பிரகாரம் ‘பார்வையாளர் நாடு’ எனும் வகையில் 127 உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (2016.03.24) அன்று, ஐ நா பாதுகாப்புச் சபையில் பதின்நான்கு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் நிறுவப்படுவது தடை செய்யப்படுகிறது. 

பதினைந்தாவது நாடான அமெரிக்கா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தனை ஏற்பாடுகளும் உலகின் உச்ச சபையில் இருந்தும் கூட, மொசப்பத்தேமிய நாகரீகத்தின் தொட்டில் என குறிப்பிடப்படும் மேற்படி பிராந்தியத்தின் உரித்தாளர்களில் ஒரு பகுதியினரான பலஸ்தீன மக்கள் மீது 1948 ஆம் அண்டில் நேச நாடுகளால் புதிதாக, பலவந்தமாக சிருஷ்டிக்கப்பட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் அடாவடித்தனங்களும் நிறுத்தப்பட முடியாமல் இருக்கின்றன.

யாழில் காசா மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் (Photos)

யாழில் காசா மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் (Photos)

மனித உரிமை நிலவரம்

தன்னிடம் உதவி கேட்கும் நாடுகளுக்கு மனித உரிமை நிலவரங்களை நிபந்தனையாக்கும் மேற்குலகமும், உலக நாடுகளின் பொது அமைப்பான ஐ.நா வும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை, பொதுமக்கள் மீதான படுகொலைகளை, யுத்தக் குற்றங்களை கண்டு கொள்ளாமலிருப்பதுடன் அதன் செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதனை நாமும் எம் வரலாற்றுடன் ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.

வன்னியின் கிழக்கு கரையில் 2009 இல் சிறு நிலப்பரப்பில் அடைபட்ட நிலையில் இருந்த மக்கள், புலிகளைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட அனுமதிக்கப்பட்டதைப் போலவே இன்று பலஸ்தீனத்திலும் ஹமாஸைக் காரணம் காட்டி அங்குள்ள மக்கள் கொல்லப்படுகின்றனர்.

பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்கான ஆதரவை உறுதி செய்வோம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | Isreal Hamas War Sri Lanka

மறைந்த பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் அவர்களின் தலைமையில் பலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் அங்கத்துவப் போராளிகள் அமைப்புகளும் சுதந்திர பலஸ்தீனத்திற்காக போரிட்ட போது அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள்.

அன்று பலஸ்தீன மக்களின் போராட்டம் மதங்களைக் கடந்து தேசத்தின் விடுதலையையே இலக்காகக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பெரும்பாலான பலஸ்தீனர்களும் கணிசமானளவு இஸ்ரேலியர்களும்கூட இரு நாடுகள் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

ஆனால் இன்று, மேற்குலக நாடுகளின் ஆதிக்க உணர்வும் பொருளாதார நலன்களும் அதற்கெதிரான பிராந்திய சக்திகளின் அதிகார முனைப்புகளும் பலஸ்தீன தேசத்தை சிதைத்து குறுக்கிவிட்டதோடு, அம் மக்களின் சுதந்திரப் போராட்டமும் அடிப்படைவாதப் போராட்டம் போல அணுகப்படுகிறது.

முற்போக்கு சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருந்த பலஸ்தீன சக்திகள் பிராந்திய போட்டிச் சுழியில் சிக்கி கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணங்கி, இணைந்து செயற்படும் நிலைக்கு சென்று விட்டன.

சமாதான வலைக்குள் பலஸ்தீன அதிகார சபையை சிக்க வைத்து இஸ்ரேலிற்குப் பலத்தையும், பலஸ்தீனத்திற்கு வெறும் பார்வையாளர் தகுதியையும் வழங்கி, எழுச்சி கண்டு வந்த ‘இன்பாடிடா’ போராட்டத்தை மழுங்கடித்த நோர்வே நாட்டு மத்தியஸ்தம் குறித்து பலஸ்தீனத் தலைவர் அரபாத் அவர்கள் அன்று ஈழப் போராளிகளுக்கு விடுத்திருந்த எச்சரிக்கைக் குறிப்பை நாம் இன்று மட்டுமல்ல என்றும் நினைவிற் கொள்ளவேண்டும்.

பலஸ்தீன மக்களை விரட்டியும் பலஸ்தீனப் பிரதேசங்களை ஊடறுத்தும் உருவாக்கப்பட்ட இஸ்ரேலியக் குடியேற்றங்கள் விலக்கப்பட்டு குறைந்த பட்சம் 1967 இல் உலக நாடுகளால் இணக்கம் காணப்பட்ட எல்லைக்கோட்டுக்கு இஸ்ரேலியப் படைகள் மீள அழைக்கப்பட்டு உருவாக்கப்படக் கூடிய ‘இரு நாடுகள்’ தீர்வே பலஸ்தீனத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும். கூடவே இஸ்ரேலிய மக்களுக்கு பாதுகாப்பையும் நிம்மதியையும் கொடுக்கும்.

பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு வடிவங்களையே இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்த அன்றைய ஜே.ஆர் அரசு தமிழர் தாயகத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. குடியேற்றங்களை நிறுவுதல், தேசத்தை துண்டாக்குதல், பண்பாட்டினை மாற்றியமைத்தல், குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் என அனைத்தையும் படைபலத்தின் துணையுடன் நிறைவேற்றிக் கொண்டது. இன்று வரை அது தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஏறக்குறைய நூறாண்டுகளாக ஆக்கிரமிப்பாளனின், ஆயுதக் குழுக்களுக்கும் கட்டமைக்கப்பட்ட படைகளுக்கும் எதிராக விடாது போராடும் பலஸ்தீன மக்கள் தமது போராட்டத்தின் நியாயங்களை தார்ப்பரியங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தவும் தவறவில்லை.

பலஸ்தீன மக்களின் போராட்டத்துடன் ஒத்த பரிணாமங்களைக் கொண்டிருக்கும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு இவையெல்லாம் படிப்பினைகளே. பலஸ்தீன மக்களினது, அவர்களது தேசத்தினது சுதந்திற்கான நியாயமான தீர்வுக்காக நாம் என்றும் அவர்களுடன் உறுதியாய் நிற்போம் - என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் .......! இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் .......! இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US