வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் .......! இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் ஆபத்தில் உள்ளதாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலவில் விழுந்து வரும் நுண் விண்கற்கள், விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
இவ் நுண் விண்கற்கள் நிலவில் விழும் போது குண்டு வெடிப்பது போன்ற பாதிப்பு ஏற்படும், தூக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டரும் ரோவரும் தாக்கப்படலாம் என இஸ்ரோவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெடித்து சிதறும் ஆபத்து
இதனால் அவை வெடித்து சிதறும் ஆபத்து உள்ளதாகவும் கடந்த காலங்களில் அப்பல்லோ விண்கலம் இதேபோன்ற பாதிப்பை சந்தித்தாகவும் இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது.
14 நாட்களில் கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் இரவு பொழுது வந்ததால் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டு தூக்க நிலைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையிலேயே அவை வெடித்து சிதறும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டில் ஒரு பாதி.....! நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்து - செய்திகளின் தொகுப்பு





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க Cineulagam

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
