காசா வைத்தியசாலை தாக்குதல்: பிரான்ஸ் உளவுத்துறையின் அதிர்ச்சி தகவல்
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள வைத்தியசாலையில் மீது அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் இராணுவம் அதிர்ச்சிகர தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பில் யார் நடத்தினர் என்பது தொடர்பில் எவ்வித பொறுப்பு கூறலும் இடம்பெறாத நிலையில் பிரான்ஸ் இராணுவ உளவுத்துறை இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காசா வைத்தியசாலை மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை எனவும், மாறாக பாலஸ்தீனியத்தின் ஏவுகணையே வைத்தியசாலை மீது விழுந்திருக்கலாம் என கூறியுள்ளது.
வைத்தியசாலை தாக்குதல்
''இந்த தாக்குதலை பாலஸ்தீனியம் தவறாக நடத்தி உள்ளது. அதாவது இலக்கு மாறியதால் ஏவுகணை வைத்தியசாலை மீது விழுந்துள்ளது'' என பிரான்ஸ் இராணுவத்தின் உளவுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு காசாவின் அல் அஹ்லி வைத்தியசாலையில் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என பொதுமக்கள் பலியாகினர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தற்போது வரை 471 பேர் பலியாகி இருப்பதை பாலஸ்தீனம் உறுதி செய்துள்ளது.
ஹமாஸ் குற்றச்சாட்டு
இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. எனினும் அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இதற்கமைய பிரான்ஸை பொறுத்தவரை இதுபோன்ற தகவல்கள் எதுவும் வெளியிடுவது இல்லை. எனினும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் அறிவுரையின் பேரில் காசா வைத்தியசாலை தாக்குதலின் பின்னணி குறித்த விடயத்தை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக தற்போது வெளியிடப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.