யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: கிழக்கு மாகாண ஆளுநரின் கடுமையான அறிவிப்பு (Video)
அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தெளிவுப்படுத்தல்
மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை அது சிங்கள மக்களாக இருக்கட்டும், தமிழ் மக்களாக இருக்கட்டும், கிருஸ்தவ மக்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் மக்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறான பிரச்சாரம்
ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று.
அது முற்றிலும் தவறான விடயம். தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை.
எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |