போரின் போக்கை மாற்றப்போகும் காசா வைத்தியசாலை தாக்குதல் (Video)
கசாவின் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலானது இஸ்ரேல் - ஹமாஸ் போரின் சமாதான கதவுகள் அனைத்தையும் மூடியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் எதிரொலியானது இஸ்ரேலையும் கடந்து அரபுநாடு முழுவதும் இழுத்து செல்ல போகின்றது என்ற அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வருகைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது, அமெரிக்காவானது மத்திய கிழக்கு நாடுகளில் நகர்த்த இருந்த அனைத்து இராஜதந்திர செயற்பாடுகளுக்கும் தடையாகியுள்ளது.
இப்போது இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே வழி யுத்தம் மாத்திரமே என்பதை இந்த தாக்குதல் பகிரங்கப்படுத்தியுள்ளது.
இதன்படி இஸ்ரேல், ஹமாஸ் மீது எதிர்வரும் நாட்களில் எவ்வாறான யுத்தத்தின் வியூகங்களை வகுக்க உள்ளது? அவை மத்தியகிழக்கில் எவ்வாறான தாக்கங்களை உருவாக்க போகின்றது என்பதை ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...