இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் கொல்லப்பட்டுள்ளார்.
நபுலஸ் நகரில் பலாடா முகாம் பகுதியில் அப்துல்லா தங்கியிருந்த நிலையில், வாகனம் ஒன்றில் சென்றபோது படையினரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், அப்துல்லா மற்றும் அவருடன் இருந்த பயங்கரவாத உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்
இவர், எதிர்வரும் நாட்களில் பெரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஜூட் மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் பல முக்கிய பயங்கரவாத உட்கட்டமைப்புகளில் ஒன்றை அமைத்தவர்களில் முக்கிய பொறுப்பு அப்துல்லாவுக்கு உள்ளது என்று இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.
அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் நாட்டில் உள்ள சிலரிடம் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |