காசாவில் 67 பாலஸ்தீனர்களை கொன்ற இஸ்ரேலிய படையினர்
வடக்கு காசாவில் ஐக்கிய நாடுகளின் உதவி லொறிகளுக்காக காத்திருந்த குறைந்தது 67 பேரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 லொறிகளில் உணவுப்பொருட்கள் வந்திறங்கியபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு
பசியுடன் இருந்த பொதுமக்களின் பெரும் கூட்டத்தினர் குறித்த இடத்தில் வந்தபோதே, அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
எனினும் உடனடி அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காகவே தாம் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
எனினும் 67 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை இஸ்ரேலிய படையினர் மறுத்துள்ளனர்.
இந்தநிலையில் காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமையில் மாத்திரம் 100 பேர் வரை இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



