ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை.. இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று நடத்தப்பட்ட இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத்தை கொலை செய்துள்ளதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.
இன்று காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கர தாக்குதல்
இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இறந்தவர்களில் சயீத் இருப்பதாக ஹமாஸ் அல்லது மருத்துவர்களிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல்களும் இதுவரை வெளியாகவில்லை சயீத் கொல்லப்பட்டமை உறுதியானால், 2026 அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததது.
அதிலிருந்து ஒரு மூத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்ததில் இது மிக உயர்ந்த படுகொலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சயீத் ஹமாஸின் ஆயுத உற்பத்திப் படையின் தலைவர் என்று இஸ்ரேலிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸின் காசா நகர படைகளுக்கு சயீத்தே தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam