காசா பகுதியில் 4 பணயக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் இராணுவம்
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினால், பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பேரை இஸ்ரேல் இராணுவம்(Israel Defense Forces) மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது குறித்த பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட நால்வரும் 21, 25, 27 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள்
இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் கருத்து தெரிவிக்கையில்,
“ஹமாஸ் போராளிகள் அவர்களை இரண்டு கட்டிடங்களில் பிடித்து வைத்திருந்தனர். இஸ்ரேல் படைகள் அவர்களை சுற்றி வளைத்து நால்வரையும் மீட்டுள்ளனர்.” என கூறியுள்ளனர்.
எனினும், பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள் உட்பட 55 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 9 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
