காஸாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் : உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்
காஸாவின் வடபகுதிக்கான உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் இயக்குநரான 47 வயதுடைய முஹம்மது மஜீத் அபு அல்-அவ்ஃப், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷாதி அகதிகள் முகாமில் உள்ள அவரது குடியிருப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில்,முஹம்மது மஜீத் அபு அல்-அவ்ஃப் (47), அவரது மனைவி நூரா எஸ்ஸத் அபு அல்-அவ்ஃப் (41), மகள் யுஸ்ரா (15), மகள் ஜனா (13) ஆகிய நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த
முன்னதாக, நேற்று முன்தினம் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் நயீம் அபு நஹாலும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்வதாகவும், ஷாதி அகதிகள் முகாமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2025 ஒக்டோபர் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும், இதுவரை குறைந்தது 1,680 பேர் கொல்லப்பட்டு 6,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய நாடுகள் உடனடியாகத் தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.