பாதுகாப்பாக தப்பிச் செல்லுங்கள் : காசா மக்களுக்கு இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் மூண்டுள்ள நிலையில், காசா மக்களை பாதுகாப்பாக தப்பிச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வாய்ப்பு இருக்கும்போது, ராஃபா வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் அறிவுறுத்தியுள்ளார்.
காசா மீது தற்போது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
காசா எல்லை திறந்துள்ளது
இந்தநிலையில், இஸ்ரேலிய இராணுவத்தின் சார்பாக அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் கூறுகையில்,
வாய்ப்பிருக்கும்போதே காசா மக்கள் எகிப்துக்கு தப்பி செல்லுங்கள், காசா எல்லை திறந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
காசாவிலிருந்து எகிப்துக்கு செல்லக்கூடிய ஒரே வழியான காசா எல்லை திறந்திருப்பதால் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு இஸ்ரேலிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தம் நீண்டதாக இருக்கும், யுத்தத்தின் முடிவில் மத்திய கிழக்குப்பகுதி வேறு மாதிரியாக இருக்கும், காசாவை ஒருவழி செய்யாமல் விடமாட்டோம் என பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு கடுமையாக தெரிவித்தார்.
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா மக்கள் சுமார் 23 லட்சம் பேர் சிறிய நிலப்பரப்பில் சிக்கி தவித்து வருகின்றனர்.