ஈரானின் எண்ணெய் தளங்கள் மீதான இஸ்ரேலின் இலக்கு: அமெரிக்கா வெளியிட்ட நிலைப்பாடு
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் எண்ணெய் தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவுள்ளதாக வெளியான எச்சரிக்கை தொடர்பில் விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் எண்ணெய் ஆலைகளை தாக்கும் நோக்குடைய இஸ்ரேலை ஆதரிக்கிறீர்களா என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களினால் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் வழங்கம்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க இராணுவத்துக்கு உத்தரவிட்டேன்.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்
இதற்கமைய, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளேன்" எனறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |