பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் புதிய மரண தண்டனை சட்டம்: எட்டு நாடுகள் கடும் கண்டனம்
இஸ்ரேலியர்களைக் கொல்லும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த ஒருதலைப்பட்சமான சட்டத்தை எதிர்த்து பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய எட்டு முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
எட்டு நாடுகள் கடும் கண்டனம்
இந்தச் சட்டத்தின்படி, இஸ்ரேலியர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்க முடியும்.

ஆனால், அதேபோன்ற குற்றத்தைச் செய்யும் யூத இஸ்ரேலியர்களுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு இனவெறி அமைப்பை உருவாக்குவதோடு, பாலஸ்தீனிய மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மறுக்கும் செயல் என்று அந்த எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய மரண தண்டனை சட்டம்
மேலும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு உணவு மறுக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் குறித்து இந்த நாடுகள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்தச் சட்டம் பிராந்தியத்தில் நீதியைச் சீர்குலைத்து, மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam