காசா மக்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்- செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட காசா மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக பலஸ்தீன் அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் இதனை குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “ இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு காசா ஆளாகிவரும் சூழலில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட காசா மக்கள் மீது கொடூரமான குற்றங்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் முன்னாள் கைதிகளிடமிருந்து பெறப்படும் தகவலின்படி, அவர்கள் கைதிகளை சித்திரவதை செய்கின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு கைதிகள் எனக் குறிப்பிடப்படுபவர்களில், பெண்களும், குழந்தைகளும், மருத்துவர்களும் கூட அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான எந்த தகவல்களையும் அளிக்க இஸ்ரேல் அதிகாரிகள் மறுக்கின்றனர்” என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றை நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |