கினிகத்தேனை பகுதியில் கோர விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற வான் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
கினிகத்தேனை பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் வானும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
