தீவிரமடையும் போர் : 6 பிணைக் கைதிகளின் உடல்களை மீட்ட இஸ்ரேல்
இஸ்ரேல்(Israel) -ஹமாஸ் (Hamas) இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மற்றும் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காசாவில் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 6 பிணைக் கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த முன்மொழிவு
குறித்த நடவடிக்கையானது, இஸ்ரேலின் சம்மதத்திற்கு பிறகு காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான "பிரிட்ஜிங்" முன்மொழிவுக்கு ஹமாஸ் அமைப்பு உடன்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) சந்திப்பு பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "பிரிட்ஜிங்" முன்மொழிவுக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இது போர் நிறுத்தம் மற்றும் பிணை கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam