உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா: உடன் வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு
உக்ரைனின் (Ukraine) முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை (Pokrovsk) ரஷ்ய (Russia) படைகள் ஆக்கிரமித்து வருகின்ற நிலையில் அங்குள்ள மக்களை உக்ரைன் உடனடியாக நகரைவிட்டு வெளியேற்றி வருகின்றது.
இந்நிலையில், மக்கள் அந்நகரை விட்டு வெளியேறும் மிக பரிதாபகரமான காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சுமார் 53,000 பேர் வசித்து வரும் குறித்த பகுதியில் ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைன் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது.
தொடரும் கைப்பற்றல்கள்
முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் (Russia - Kursk) பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தின் மீது உக்ரைன் (Ukraine) தாக்குதல் மேற்கொண்டது.
குறித்த பாலத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் (US) பெற்றுக்கொண்ட ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
