உக்கிரமடையும் யுத்த களம்...! அமெரிக்க ஜனாதிபதி இன்று இஸ்ரேல் விஜயம்
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரின் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (18.10.2023) அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு
இந்த விஜயத்தின் மூலம் தமது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை பைடன் மீண்டும் தெளிவுபடுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தைகைய ஒரு முக்கியமான தருணத்தில் ஜனாதிபதி இஸ்ரேலுக்கு செல்வதன் மூலம் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை பைடன் உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்று பிளிங்கன் கூறியிருந்தார்.
நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை சுமார் 4,000 ஐ கடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருகிறது.
மிலேச்சத்தனமான தாக்குதல்
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
