மாயமான இலங்கை பெண் ஹமாஸ் அமைப்பினரால் படுகொலை: இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி
இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கை பெண் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஹமாஸ் அமைப்பினராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பெண்ணின் சடலம்
சம்பவத்தில் உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின் சடலம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் 23 இலங்கையர்களின் பெயர் பட்டியல் எகிப்திலுள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
