இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை
காசா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய படைகள் காசாவில் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தி, பாரிய தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கத்தாரில் மீண்டும் தொடங்கியுள்ளன.
துருப்புக்கள்
முன்னதாக, காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக அறிவித்தது.

மேலும், இஸ்ரேலிய இராணுவம் "விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெருமளவிலான துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பி வருவதாகவும்" தெரிவித்திருந்தது
இருப்பினும், போர் நிறுத்தம் ஏற்படாத வரையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஹமாஸ் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் படைகளின் அணிதிரட்டல் காரணமாக, ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் தற்போது "இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri