RS producation நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான முள்ளிவாய்க்கால் பாடல்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை தமிழர் தாயக வாழ் மக்கள் உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் சமூகமும் கோரி வருகிறது.
மே 18 என்பது தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் மறக்கமுடியாத வடுக்களின் ஒரு அங்கமாகும்.
அந்தவகையில் இலங்கையின் ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக மே 18ஆம் திகதியான நாளை தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வுகள் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முகமாக சுவிட்சர்லாந்தில் உள்ள RS producation நிறுவனத்தின் தயாரிப்பில் Tamilar 2025 என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமது உறவுகள் அனுபவித்த வலிகளின் அங்கமாக குறித்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது...
