இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா பொதுச் செயலாளருக்கு தடை
இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச்செயலாளர் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றின் ஒரு கறையாக கருதப்படுவார்
மேலும், இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனைச் செய்யாமல் மௌனம் காக்கும் எவருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்கத் தகுதி கிடையாது என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக கருதப்படுவார் எனவும் இஸ்ரேல் காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam