லெபனான் மீது தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்: உருவாகும் போர் பதற்றம்
லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களுக்குள்ளே வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தன.
கிட்டத்தட்ட 150 ஏவுகனைகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்டதாக இஸ்ரேலின் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஹிஸ்புல்லாவின் கோட்டை
குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாகவே லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருதப்படும் தஹியே என்ற பகுதி இருந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் லெபனானிலும், சிரியாவிலும் பேஜர்களும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஆயிரக்கணக்கில் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |