லெபனானில் அடுத்தடுத்து பயங்கரம் : வாக்கிடாக்கிகள் வெடித்து 9 பேர் பலி
லெபனானில் (Lebanon) அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில் நாட்டில் வாக்கிடாக்கிகள் வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றைய தினம் பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 2800 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
எனினும்.பேஜர்கள் அளவிற்கு வாக்கிடாக்கிகள் லெபனானில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
இதேவேளை, அடுத்தடுத்து லெபனானில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
பேஜர் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாட் மற்றம் இஸ்ரேலிய இராணுவம் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் இன்றைய தினமும் லெபனானில் வாக்கிடாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தின் சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 38 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
