ஓட்டமாவடியில் சில கிராமங்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனம்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தனிமைப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் அதற்கான அனுமதி நேற்று கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது.
இதில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், ஓட்டமாவடி பிரதேச சபையினர், இராணுவத்தினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து அப்பிரதேசங்களிலுள்ள வீதிகளுக்கு தடையினை போட்டு பாதுகாப்பு பலப்பப்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை குறித்த மூன்று கிராம அதிகாரி பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் என்பதோடு, பொது மக்கள் வீடுகளிளேயே இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.











வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
