மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு! நேரத்தில் மாற்றம்
புதிய இணைப்பு
நாட்டில் இன்று இரவு நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri