ஆயுதப் படைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடுகிறதா அநுர அரசு!
பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பல 'வழக்கத்திற்கு மாறான' அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர், முப்படைகள் தொழில் ரீதியாக தரமுயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த வார இறுதியில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்கொந்தாவிடம், ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அவசியமான காரணங்கள்
“இந்த கடமையை செய்வதற்கு அவசியமான காரணங்கள் அனைத்தையும் நாம் கண்டறிந்துள்ளோம்.
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம்.
ஆகவே என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற்படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன.
நவீன தொழில்நுட்பம்
அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.
ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படவுள்ளோம்.
இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு“ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
