தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! ஆட்சி அமைக்க திமுகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக உடன் அதிமுக பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
திமுகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

(இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒரு தொகுதியில் பதவி விலகுவார்) தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 (107+5) ஆக உயர்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
106 ஆசனங்கள்
ஆளுநர் இரண்டு நாள்களில் ஆதரவை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுக - 59 ஆசனங்களையும் அதிமுக - 47 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ள நிலையில் மொத்தம் 106 ஆசனங்கள் கிடைக்கும்.
இதனிடையே, விஜய்யால் பெரும்பான்மை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அரசமைப்பது தொடர்பாக திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam