ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்! IRGC விடுத்த அதிரடி அறிவிப்பு
எரிசக்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் என ஈரானிய புரட்சிகர காவற்படை எச்சரித்துள்ளது.
ஈரானிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் காலக்கெடு..
அதன்படி, அமெரிக்கா, ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தால், ஹோர்முஸ் நீரிணையை "முற்றிலுமாக மூடுவோம்" என்று ஈரானிய புரட்சிகரப் காவற்படை படை (IRGC) கூறியுள்ளது.

48 மணி நேரத்திற்குள் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை "முற்றிலுமாக அழித்துவிடுவோம்" என்று ட்ரம்ப் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே, தற்போது, ஈரானிய புரட்சிகரப் காவற்படை படை இவ்வாறு எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.