யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதிக் கிரியைகள்
கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாநிதி திலீபனின் இறுதிக் கிரியைகள் இன்று(22) இடம்பெற்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இறுதி கிரியைகள்
அதனையடுத்து யாழ்.பாண்டியன்தாழ்விலுள்ள இல்லத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்றன. பின்னர் கைதடியில் அமைந்துள்ள சித்தமருத்துவ பீடத்தில் அமரர் தயாநிதி திலீபனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் யாழ்.கோம்பயன் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, கொலைச் சந்தேக நபர்களான மகள் மற்றும் மருமகன் ஆகியோரை யாழ்.பதில் நீதவான் வாசல்தலத்தில் இன்று(22) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan