எரிபொருள் விலை உயர்வால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் மற்றுமொரு கட்டணம்
எரிபொருள் விலை உயர்வு காரணமாக, இன்று (22) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 20 வீதம் உயர்த்தப்படும் என்று கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையைத் தொடரும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துச் சங்கங்களின் செயற்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கட்டண உயர்வு குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தற்போது தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விலை உயர்வு கட்டாயம்
இவ்விடயம் குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் ஏற்கனவே ஒரு கடுமையான நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு இல்லாமல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து சேவையைத் தொடர இயலாது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் இந்தத் தாமதத்தை கூடிய விரைவில் சரிசெய்யுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில், இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் எரிபொருள் வீணாவதும் ஏற்படுகிறது.
இவ்விடயம் குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை பொருட்கள் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இனாம் காஃபூர், எரிபொருள் விலை உயர்வின் காரணமாகக் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
அதிகரிக்கும் தாமத கட்டணம்
கண்டெய்னர் அனுமதி செயல்முறைக்குக் குறைந்தபட்சம் 4-5 நாட்கள் ஆவதாகவும், அந்தக் காலத்தில் ஒரு நாளைக்கு ரூபா 15,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், எரிபொருள் விலை உயர்வால் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும், அதற்கேற்ப கண்டெய்னர் தாமதக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

மேலும், பேசிய இலங்கை பொருட்கள் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இனம் காஃபூர், நாம் கணக்கிட்டால், கொழும்பைச் சுற்றியுள்ள விநியோகங்களுக்காக ஒரு கொள்கலன் போக்குவரத்து வாகனத்திற்கு வழக்கமாக ரூ. 25,000 வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இப்போது, ஒரு விலை உயர்வை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு சரக்கு வண்டிக்கும் ரூ. 15,000 தாமதக் கட்டணம் செலுத்துகிறோம்.
மேலும், அதன் ஐந்து மடங்கான ரூ. 75,000 தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனுடன், அந்த ரூ. 25,000 வாடகையும் வசூலிக்கப்படுகிறது. இப்போது, டீசல் விலை சுமார் 30 வீதம் அதிகரித்துள்ளது.
இந்த உயர்வுடன், சுமார் 400 வீதம் அதிகரிப்பை நாம் எதிர்பார்க்கலாம். துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்க சுமார் 4-5 நாட்கள் ஆகும். தினசரி வாடகைக்கு சுமார் 5 நாட்கள் ஆகும் என்றால், அந்த வாடகை வாகனத்தின் உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படும்.
இப்போது நாம் விடுமுறை மாதத்தில் இருக்கிறோம், எனவே அவற்றை மிக விரைவாக விடுவித்து மக்களுக்கு வழங்க வேண்டும். இலங்கைக்கு வரும் பொருட்களை மக்கள் தாமதமின்றி அனுபவிப்பதற்கான வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam