கட்டார் கடல்பகுதிக்குள் திடீரென விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தியால் பரபரப்பு
கட்டார் கடல் எல்லைக்குள் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன மீதமுள்ள நபரைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளை சிறப்புப் படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் அல்லது விமானத்தில் இருந்தவர்களின் அடையாளங்கள் குறித்த மேலதிக விவரங்களை அமைச்சகம் வழங்கவில்லை.
தேடுதல் பணி..
முன்னதாக, வழக்கமான பணியின்போது உலங்குவானூர்தி ஒன்று "தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியதாக கட்டாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

தொழில்நுட்பக் கோளாறு என்பதைத் தவிர, விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை, மேலும் இந்த விபத்து விரோத நடவடிக்கையின் விளைவாக நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, கட்டார் தொடர்ச்சியான ஈரானிய ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது.
இதில், உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையங்களில் ஒன்றான அந்நாட்டின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை பலமுறை தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு