இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட ஈரான் கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால், சர்வதேச எல்லைப் பகுதியில் அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து இதுவரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளர்.
இவர்களில் ஒருவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பு
துரதிஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களைச் சிதைவடையாமல் பாதுகாப்பதற்காக, தனியார் துறையிடமிருந்து இரண்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை உரிய தலையீடுகளை மேற்கொள்ளும். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்து அறிவிக்கப்படும்.
"இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதியைப் பேணுவதே எமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். இதற்காகத் தேவையான அனைத்துத் தலையீடுகளையும் நாம் முன்னெடுப்போம்"
சர்வதேச சட்டங்கள்
நாம் சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமான விழுமியங்களின் அடிப்படையிலேயே இந்த மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்த விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
எனவே, இது குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிடாமல் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam