மத்தியகிழக்கில் தொடரும் பெரும் பதற்றம்: ஈரான் ஜனாதிபதி கட்டார் விஜயம்
மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கட்டாருக்கு மேற்கொண்டுள்ள விஜயமானது பேசுபொருளாகியுள்ளது.
இஸ்ரேல் மீது நேற்று இரவு 400க்கும் அதிகமான ஏவுகணைகளை கொண்டு ஈரான் பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கட்டாருக்கு முன்னர் திட்டமிடப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் ஈரான் மீது விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கும் அச்சநிலைக்கு மத்தியில் இந்த விஜயமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர், 'நாங்கள் போருக்கு பயப்படவில்லை' அதே நேரத்தில், 'நாங்கள் போர்வெறியர்கள் அல்ல' என்றும் கடும் தொனியில் கருத்துரைத்துள்ளார்.
ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |